பொள்ளாச்சி அருகே கவி அருவியில் தொடர் விடுமுறை காரணமாக குவிந்த சுற்றுலா பயணிகள். பொள்ளாச்சி – செப்-5 ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகம் கவி அருவியில் தொடர் விடுமுறை காரணமாக குவிந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் கோவை, திருப்பூர், ஈரோடு, பிற மாநிலங்கள் கேரளா ஆந்திரா, பாண்டிச்சேரியிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வால்பாறை செல்லும் வழியில் உள்ள அருவி கவி அருவியாகும் தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து வந்து நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அருவியில் தடை விதிக்கப்பட்டது வனத்துறையினரால், தற்போது அருவியில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர், ஓணம் பண்டிகை என்பதால் அருவிக்கு ஏராளமான சுற்றுலாப் பணிகள் வந்து குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர், சுற்றுலா பயணிகள் ஆழியார் வனத்துறை சோதனை சாவடியில் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர், பிளாஸ்டிக் பொருட்கள்,தண்ணீர் கேன் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளது மேலும் பாண்டிச்சேரி பகுதி பீச் கடல் சார்ந்த பகுதியாகும் ஆனால் தற்போது குடும்பத்துடன் பொள்ளாச்சி அருகே உள்ள கவி அருவிக்கு வந்து குளிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார், கோவை சேர்ந்த சிறுமி கூறுகையில் கோவையில் இருந்து இருசக்கர வாகனத்தில் தனது பெற்றோருடன் அருவிக்கு வந்தோம், அருவியில் குளித்து தண்ணீரில் விளையாடியது தனக்கு மகிழ்ச்சியாக உள்ளது இன்று ஓணம் பண்டிகை என்பதால் தான் குடும்பத்துடன் பிரியாணி சாப்பிட்டதாக தெரிவித்தார் மேலும் அருவியில் குரங்குகள் சுற்றுலா பணிகளை கண்டவுடன் மகிழ்ச்சியுடன் தடுப்பு கம்பியில் நடந்த சென்று தண்ணீரில் விளையாடியது சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்தது
தொடர் விடுமுறை… பொள்ளாச்சி அருகே கவி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்..
- by Authour
