கோவை, பொள்ளாச்சி அடுத்தஆழியார் அறிவு திருக்கோயில் அருகே அம்பிகா ஜெகநாதன் தம்பதியினர் இளநீர் வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.தினமும் இளநீர் வெட்டி வியாபாரம் செய்வதை வைத்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர்
இந்நிலையில் இவர்களது கடைக்கு சில மாதங்களாகவே மலபார் அணில் ஒன்று வன

ப்பகுதியில் இருந்து வெளியேறி கடைக்கு வந்துள்ளது. அப்போது, தம்பதியினர் மலபார் அணிலுக்கு

இளநீர் வெட்டி கொடுத்துள்ளார்.அதனையும் அந்த அணில் ருசித்து சாப்பிட்டுள்ளது.
அன்று முதல் இவர்கள் தினந்தோறும் இளநீர் ஒன்றை தனியாக வெட்டி வைத்து விடுவார்கள்

மலபார் அணிலும் காலை மாலை நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி மரத்திற்கு மரம் தாவி வந்து இளநீரில் உள்ள தேங்காயை மட்டும் வாங்கி சாப்பிட்டுவிட்டு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளது. இந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

