இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியத்துவம் வாய்ந்த திருநாள் தீபாவளி. இந்தியாவில் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் இந்த திருநாளை கொண்டாடுகிறார்கள். தீபாவளி பண்டிகை கொண்டாட மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதற்காக சிறப்பு ரயில்கள், பஸ்கள் இயக்கிய போதும் மக்கள் கூட்டம் அலைமோதும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்திய ரயில்வேயின் முன்பதிவு காலமானது பயண தேதியைத் தவிர்த்து 60 நாட்களாக உள்ளது.தீபாவளி பண்டிகை கொண்டாட வெளியூர்கள் செல்வோருக்கு வசதிக்கு(அக்டோபர் 16ம் தேதி) ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஐஆர்சிடிசி இணையதளம் வழியாகவும், ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூலமாகவும் டிக்கெட் முன்பதிவு நடைபெற்றது.10 நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் முடிந்தது.
சென்னையில் இருந்து, மதுரை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய ஊர்களுக்கு புறப்படும் பாண்டியன், பொதிகை , நெல்லை, முத்துநகர், கன்னியாகுமரி ஆகிய ரயில்களில் விரைவு ரயில்களின் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில், டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியல் காட்டியது.