மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுகவினர் அமைதி பேரணி நடத்தி கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். கருணாநிதி நினைவு தினத்தையொட்டி டில்லி நாடாளுமன்ற வளாகத்திலுள்ள திமுக அலுவலகத்தில் கருணாநிதி படத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அப்போது திமுக எம்.பி. திருச்சி சிவா உடனிருந்தார்.
டில்லியில் கருணாநிதி படத்திற்கு, சோனியா, ராகுல் மலர்தூவி மரியாதை
- by Authour
