டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

92
டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கில் ஏற்பட்டுள்ள லேசான சுழற்சி காரணமாக இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளில் வலுவான காற்று வீசுவதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY