Skip to content

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் வேகமாக பரவும் டெங்கு

தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டெங்கு காய்ச்சலை பரப்பும், ‘ஏடிஸ் – எஜிப்டை’ வகை கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி, நோய்களை பரப்பி வருகின்றன.

குறிப்பாக, சென்னையில் 30 பேர்; திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், 30 பேர் என, தினமும் 60க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த விபரங்கள் பொது சுகாதாரத்துறையில் பதிவான விபரம்தான். முறையான பதிவு இல்லாமல், ஆங்காங்கே சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.

பாதிப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறோம் என, சென்னை மாநகராட்சி களமிறங்கியுள்ளது.

தற்போது, சென்னையை பொறுத்தவரையில், அம்பத்துார், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு, பெருங்குடி, ராயபுரம் மண்டலங்களில் டெங்குவின் பாதிப்பு சற்று அதிகமாக உள்ளது.
பொதுமக்கள் தங்கள் வீடுகளின் அருகாமையில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும். மேலும், வீட்டில் உள்ள, ‘பிரிஜ்’ பின்பக்கம் தண்ணீர் வடிந்து தேங்கக்கூடிய தொட்டியை வாரத்தில் ஒருமுறையாவது சுத்தம் செய்ய வேண்டும். மொட்டை மாடியில் மழைநீர் தேங்கக்கூடிய வகையிலான பொருட்கள் இருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும். அப்போது தான், ‘ஏடிஸ்’ கொசு பரவலை தடுக்க முடியும்.

டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால், சென்னை மட்டுமின்றி அருகில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி, மாவட்ட நிர்வாகங்களுக்கு, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

error: Content is protected !!