Skip to content

9ம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை…. VSB ஆலோசனை

கரூர் கலைஞர் அறிவாலயத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகின்ற ஒன்பதாம் தேதி கரூர் வருகை தருவதை ஒட்டி ஆலோசனை கூட்டம் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து செந்தில்பாலாஜிா நிருபர்களிடம் கூறுகையில்:

தமிழக துணை முதல்வர் வருகின்ற ஒன்பதாம் தேதி அரசு மற்றும் தனியார் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தர உள்ளார்

காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துறை சார்ந்த ஆய்வு கூட்டம் அதன் பிறகு 12 மணிக்கு பிரேம் மஹால் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அது துணை அமைப்பாளர்கள் மாநகரப் பகுதி நகர ஒன்றிய பேரூராட்சி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர் உடைய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

மாலை 4.30 மணி அளவில் கரூர் புதிய பேருந்து நிலையம் வளாகத்தில் பேருந்து நிலையம் உட்பட பல்வேறு பணிகளை திறந்து வைத்த பின்பு 18000 பயனாளிகளுக்கு அரசினுடைய நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்

அதனைத் தொடர்ந்து மாலை ஐந்து முப்பது மணி அளவில் ராயனூர் தளபதி திடலில் கட்சி நிகழ்ச்சி நடைபெற உள்ளது இதில் நான்கு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 155 வாக்குச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ள பி எல் ஏ 2 பி எல் சி உடைய பொறுப்பாளர்கள் பூத் டிஜிட்டல் ஏஜென்ட் பூத் இளைஞரணி மகளிர் அணி ஆகியவருடைய பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது இதில் 16,000 பேர் கலந்து கொள்ள உள்ளனர் இதில் துணை முதல்வர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார் கூட்டம் முடிந்த பிறகு அனைவருக்கும் அசைவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களில் ராயனூர் பகுதியில் போர்க்கால அடிப்படையில் அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் கரூர் மாவட்டத்தில் 1555 வாக்குச்சாவடிகளில் நேற்று வரை 82,000 கழக உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.

கரூர் மாவட்டம் என்பது மற்ற மாவட்டங்களை விட முதல் ஐந்து இடங்களில் கரூர் மாவட்டம் இடம்பெறும் அளவிற்கு உறுப்பினர் சேர்க்க மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கரூரில் மணல் கொள்ளை நடைபெறுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு முன்வைத்தது குறித்து செய்தார்கள் எழுப்பிய கேள்விக்கு வேலையில்லாதவர்கள் மனு கொடுத்தால் தான் நீங்கள் ஏதாவது செய்தி போடுவீர்கள் ஒன்னு வீட்டோட இருக்கணும் இல்லாட்டி எல் சி பி பெட்ரோல் பங்கோட இருக்கணும் ஆனால் வங்கியில் உட்கார்ந்து பெட்ரோல் டீசல் சேல்ஸ் செய்யும் பார்க்க முடியாது அதற்காக இரண்டு மனுக்களை எடுத்து வந்து அதனை நீங்கள் பார்த்துவிட்டு செய்தி போடுவீர்கள் அதற்கு நீங்கள் என்னிடம் உங்கள் கருத்து கேட்பீர்கள் ஐந்து ஆண்டுகால ஆட்சியில் இந்த கரூர் மாவட்டத்தில் அரசு நிர்வாகத்தை வழிநடத்தக்கூடிய இடத்தில் இருந்து என்ன திட்டங்கள் கரூர் மாவட்டத்தில் புதிதாக கொண்டுவரப்பட்டது ஆனால் தற்போது உள்ள நாங்கள் அரசு வேளாண் கல்லூரி கொண்டு வந்துள்ளோம் அதற்கு முன்னதாக நான் இருந்த பொழுது அரசு மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தேன் நெரூர் பாலம் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம் நானும் அந்த வீடியோவை பார்த்து உள்ளேன் இதில் யாருமே கேள்வி கேட்கவில்லை நீங்கள் கேள்வி கேட்டிருக்க வேண்டும் இந்த மக்களுக்கு ஐந்தாண்டு கால ஆட்சியில் என்ன செய்தீர்கள் புதியதாக ஏதாவது திட்டங்கள் கொண்டு வந்தீர்களா அவர்கள் கொண்டு வந்த திட்டம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு எந்த தகுதியும் இல்லை

ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் சந்தித்து ஏதோ ஒரு மனுக்களை கொடுத்துவிட்டு செய்திகளை சந்தித்து பேட்டி கொடுக்க வேண்டியது காலையில் செய்தி வரும் செய்தி வரவில்லை என்றால் அந்த பத்திரிக்கையாளரை ஏன் செய்தி வரவில்லை என்று கேட்பது நீங்கள் ஏன் இப்படி செய்து கொண்டீர்கள் என்று கேட்பது அந்த மாதிரி சிவில் தான் இங்கு உள்ளது அதற்கு எங்களுக்கு கவலையும் இல்லை அதனை சிந்திப்பதற்கு எங்களுக்கு நேரமில்லை எங்களுக்கு ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கை சென்று கொண்டுள்ளது அதேபோல் மக்கள் பணியின் மிக சிறப்பாக சென்று கொண்டுள்ளது பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை முதல்வர் வழங்கி வருகிறார் பல்வேறு சிறப்பு திட்டங்களை முதல்வரிடம் கேட்டு துணை முதல்வர் கரூர் மாவட்டத்திற்கு கொடுக்கிறார்

கரூர் மாவட்டம் என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை 2026 சட்டமன்ற தேர்தலில் நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் உதயசூரியன் வெல்லும் இருக்கிறவர்களைப் பற்றி பேசலாம் மக்களைப் பற்றி சிந்திக்கிறவங்களை இடம் பேசலாம் மக்களிடம் நன் மதிப்பை பெற்றவரிடம் பேசலாம் என கூறினார்.

error: Content is protected !!