துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை(புதன்கிழமை) கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். துணை முதல்வருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிப்பது உள்ளிட்ட சிறப்பான ஏற்பாடுகளை மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி செய்துள்ளார்.
துணை முதல்வரின் நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:
காலை 10 மணி- கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம்
காலை 11.30 மணி- கரூர் திருநகரில் மகளிர் சுயஉதவிக்குழுவினருடன் துணை முதல்வர் கலந்துரையாடுகிறார்.
மதியம் 12.30 மணி- கரூர் பிரேம் மகாலில் ஒன்றிய , நகர, பகுதி, பேரூர் திமுக இளைஞர் அணி நிர்வாகிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.
மாலை 5 மணி: கரூர் திருமாநிலையூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்து பேசுகிறார்.
5.15 மணி: திருமாநிலையூாில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
மாலை 6மணி: கரூர் ராயனூர் தளபதித் திடலில் பாக முகவர், பாக உறுப்பினர், பாக டிஜிட்டல் முகவர்கள் ஆலோசனைக்கூட்டம் நடத்துகிறார்.
மேற்கண்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி மற்றும் திமுக நிர்வாகிகள் திரளாக பங்கேற்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளது. கட்சி நிகழ்ச்சிகளில் தொண்டர்கள், நிர்வாகிகள் திரளாக பங்கேற்கும்படி செந்தில் பாலாஜி கேட்டுக்கொண்டுள்ளார்.
கரூர் மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு துணை முதல்வர் உதயநிதி 10ம் தேதி(வியாழன்) காலை நாமக்கல் செல்கிறார். காலை 10 மணிக்கு நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார். 11.30 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். மதியம் 12 மணிக்கு நாமக்கல் ஸ்ரீ மகாலில் திமுக சார்பு அணி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.
மாலை 3 மணி: மாவட்ட விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடுகிறார்.