கரூர் மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் ரூ.4,348 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேச்சு.
கரூர் இந்திய தொழிற்கூட்டமைப்பு, யங் இன்டியன்ஸ் சார்பில் “வளரும் கரூர்” என்ற தலைப்பில் கரூர் விஷன் 2030 என்ற கருத்தரங்கம் கரூர் வெண்ணெய்மலையில் உள்ள தனியார் அரங்கத்தில் நடைபெற்றது.
சிஐஐ தலைவர் எம்.பிரபு வரவேற்றார். ஆட்சியர் மீ.தங்கவேல் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ பங்கேற்று விருதுகளை வழங்கி பேசுகையில்: திராவிட மாடல் முதல்வர் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா, உலக அளவில் தொழில் முனைவோர்களை சந்தித்து ஏராளமான முதலீடுகளை திரட்டி 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழகத்தை 1 ட்ரில்லியன் பொருளாதார மாநிலமாக மாற்ற தீவிரமாக இயங்கி வருகிறார்.
தமிழக அளவில் கரூர் பொருளாதாரம் முக்கிய பங்காற்றவேண்டும் என கரூர் விஷன் 2030 என்ற நோக்கின் கீழ் கரூர் பொருளாதாரத்தை ரூ.50 ஆயிரம் கோடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜவுளி தொழிலில் ரூ.25,000 கோடி, இதர தொழில்கள் மூலம் ரூ.25,000 அடைய இலக்கு

நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்துச் செய்தி அனுப்பி உள்ளார் தெரிவித்த அவர் முதலமைச்சரின் வாழ்த்து மடலை வாசித்துக் காண்பித்தார்..
இதனை தொடர்ந்து கரூர் மாவட்டத்திற்கு கடந்த நான்கரை ஆண்டுகளில் ரூ.4,348 கோடி நிதி ஒதுக்கப்பட்டு சாலை, வடிகால், தெருவிளக்கு, பேருந்து நிலையம், உயர்மட்ட பாலம் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும்,
நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை உள்ளிட்ட பணிகள் ரூ.917 கோடி, கரூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் சாலை உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.348 கோடி, மேலும் புதை சாக்கடை, குடிநீர் திட்ட பணிகளுக்கு ரூ.1,067 கோடி, மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகளில் ரூ.83 கோடி, 8 பேரூராட்சிகளில் 214 கோடி, 157 ஊராட்சிகளில் ரூ.1323 கோடி, கரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 12 ஊராட்சிகளில் ரூ.154 கோடிக்கு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.
இதனைத் தொடர்ந்து, வளரும் கரூர் திட்ட அறிக்கை புத்தகமாக வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில்,கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன், ராமராஜ் காட்டன்ஸ் கே.ஆர்.நாகராஜன், யுஆர்எஸஅ கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் சி.தேவராஜன், அம்பேர் வெஹிகிள்ஸ் ஹேமலதா உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
அப்போது பேசிய அவர்கள்…
கடந்த 4 ஆண்டுகளில் தொழில்துறையில் தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வதற்கு பல்வேறு திட்டங்களை வகுத்து தந்த தமிழ்நாட்டு முதல்வருக்கும் அரசுக்கும் அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
முன்னதாக சிறந்த தொழிலதிபர்களுக்கான விருதுகள் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.

