Skip to content

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ரூ.2 கோடி லாபம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பெரும் அறைகள் மீது புதிய ஜிஎஸ்டி வரி குறைப்பால் மாதத்திற்கு  ரூ.2 கோடி பக்தர்களுக்கு லாபம் கிடைத்துள்ளது.

மத்திய அரசு புதிய ஜி.எஸ்.டி வரிகளை அறிவித்துள்ளது. இவை செப்டம்பர் 22ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. புதிய அறிவிப்பின் படி, அன்றாடம் பயன்படுத்தும் மளிகைப் பொருட்கள் முதல் அத்தியாவசிய பொருட்கள் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பலவற்றுக்கு ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டுள்ளது. இது சாதாரண மக்களுக்கான தீபாவளி பரிசு என்று மத்திய அரசு கூறுகிறது. இதனால் நான்கு அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி வரி 2 அடுக்குகளாக மாற்றப்பட்டன. அதன்படி அனைத்து பொருட்கள் மீதும் வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜிஎஸ்டி வரி குறைப்பால் பக்தர்களுக்கு மாதத்திற்கு ரூ.2 கோடி  பயன்பெறும் விதமாக அமைந்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பக்தர்கள் தங்குவதற்காக  ரூ.50   முதல் ரூ  7500 கட்டணங்களுடன் நாள் விகிதத்தின் அடிப்படையில் வாடகை வசூல் செய்யப்படுகிறது. இதில் ரூ.50 முதல் ரூ.999 வரை வரி இல்லாமல் இருந்தது. ரூ.1000  முதல் ரூ.7500  வரையிலான அறைகளுக்கு 12 சதவீதம்  ஜி.எஸ்.டி. வசூல் செய்யப்பட்டு வந்தது. ரூ.7,501 க்கு மேல் உள்ள அரை களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டு வந்தது. புதிய ஜிஎஸ்டி வரி குறைப்பால் ரூ 1000 க்கு மேல் உள்ள அறைகளுக்கு 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மாதந்தோறும் பக்தர்களுக்கு ரூ 2  கோடி வரை  பயன் பெறும் வகையில் அமைந்துள்ளது. ரூ 7500க்கு மேல் வாடகை கொண்ட அறைகளுக்கு வழக்கம் போல் 18 சதவீதம் ஜிஎஸ்டி வசூல் செய்யப்படுகிறது.  இந்த புதிய ஜிஎஸ்டி வரி குறைப்பு நடைமுறை கடந்த 24 ஆம் தேதி ஆன்லைனில் டிசம்பர் மாதத்திற்காக வெளியிடப்பட்ட அறைகள் முன்பதிவின் போதே  அமல்படுத்தப்பட்டது.  நேரடியாக வரும் பக்தர்களுக்கும் கடந்த  22 ஆம் அதிகாலை 12 மணி முதல் புதிய ஜிஎஸ்டி வரி குறைப்பு நடைமுறை செயல்பட்டுள்ளதாகவும் பிரம்மோற்சவம் ஏற்பாடுகளால்  தேவஸ்தான அறிவிக்காமல் நேரடியாக அமுல்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!