நடிகர் தனுஷ் பிச்சைக்காரனாக நடித்திருக்கும் படம் குபேரா .இந்த படத்தில் தனுஷின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்படுகிறது .படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலர் தனுஷின் நடிப்புக்கு தேசிய விருது கிடைக்கும் என்று பதிவிட்டு வருகின்றனர் தனுஷ் சமீபத்தில் நடித்திருக்கும் தமிழ்-தெலுங்கு படம், குபேரா. இதனை சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார். இந்த படத்தை பார்த்த ரசிகர்கள், தற்போது இணையத்தில் தங்களது விமர்சனத்தை பகிர்ந்து வருகின்றனர்.தனுஷுடன் ராஷ்மிகா மந்தனா, தலிப் தாஹில், ஜிம் சார்ப் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் வருகின்றனர். இந்த படம், நீண்ட நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து முடிக்கப்பட்டது. தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அழுக்கு படிந்த உடையும் கையில் குட்டி நாயுமாக பிச்சைக்காரனின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலித்திருக்கிறார் தனுஷ். சாப்பாடுக்காக கையேந்தும் ஒவ்வொரு இடங்களிலும் அவரின் நடிப்பு அள்ளுகிறது ராஷ்மிகா மீண்டும் நடிப்பில் தனது முத்திரையை ஆழமாக பதித்துள்ளார். சோக முகமும் கண்ணீருமாக ராஷ்மிகா வித்யாசமான நடிப்பை கொட்டியுள்ளார். தனுசுடன் சேர்ந்து குப்பை மேட்டில் நடித்துள்ளார் சூழ்நிலைக்காக கொள்ளை கும்பலுடன் கைகோர்க்கும் நாகார்ஜுனாவின் நடிப்பு யதார்த்தம். கண்கள் மூலமாகவே வசனங்களை பேசியிருக்கிறார்.
தனுசுக்கு தேசிய விருது கிடைக்கும்” -குபேரா பற்றி நெட்டிசன்கள்
- by Authour
