Skip to content
Home » அனுமதியின்றி கட்டிடம்… நடிகர் பிரகாஷ் ராஜ்-க்கு சிக்கல்….

அனுமதியின்றி கட்டிடம்… நடிகர் பிரகாஷ் ராஜ்-க்கு சிக்கல்….

  • by Senthil

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ராஜா தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் வருவாய்த்துறை, வனத்துறை, தோட்டக்கலை துறை, போக்குவரத்து துறை, காவல்துறை என பலதுறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது மலைப்பகுதி விவசாயிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை பேசினார்கள். அப்படித்தான் பேத்துப்பாறை பகுதி ஊர் தலைவர் மகேந்திரன் பேசினார்கள். அப்போது அவர் கூறுகையில்,வில்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் அரசின் விதிமுறைகளை மீறி நடிகர் பாபி சிம்ஹா மூன்று மாடி கட்டடம் கட்டி வருவதாகவும், மலைக்கிராம விவசாயிகள் பயன்படுத்தும் சாலையை ஆக்கிரமிப்பு செய்து அப்பகுதியில் செல்லும் விவசாயிகளை ஒருமையில் பேசுவதாகவும் குற்றம்சாட்டினர்.

இதேபோல் பிரபல நடிகரான பிரகாஷ்ராஜ், பேத்துப்பாறையில் பேத்துப்பாறை பாரதி அண்ணாநகர் பகுதியில் கட்டடம் கட்டி வருவதாக புகார் எழுந்தது. மேலும் இந்த வீட்டுக்கு செல்லக்கூடிய பொதுப்பாதையை அரசிடம் உரிய அனுமதி பெறாமல் சிமெண்டு சாலை அமைத்து பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அப்போது திரைப்பட நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் அரசு விதிகளை மீறி, அனுமதி பெறாமல் வீடு கட்டி வருவது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தோம். சாதாரண விவசாயிகள் குடிசை அமைத்தால், குச்சி ஊன்றினால் கேள்வி கேட்கும் அதிகாரிகள், நடிகர்கள் அனுமதியின்றி வீடு கட்டுவதை எப்படி அனுமதித்தார்கள் என்பது தெரியவில்லை என்று வேதனை தெரிவித்தார். இது குறித்து கொடைக்கானல் கோட்டாட்சியர் ராஜா கூறும் போது, ‘விவசாய குறைப்பிற்கு கூட்டத்தில் நடிகர்கள் அனுமதியின்றி கட்டடம் கட்டுவதாக விவசாயிகள் கூறினார்கள். இது குறித்து நாங்களும் முறையாக நில அளவையர் மற்றும் அரசுத்துறை அலுவலர்களைக் கொண்டு ஆய்வு செய்வோம்.

அதன்பிறகே முழுமையாக தகவல் தெரிவிக்கப்படும். புகார் தெரிவிக்கப்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அந்த ஆக்கிரமிப்புகள் நிச்சயமாக அகற்றப்படும் என்று அப்போது தெரிவித்தார். இதையடுத்து இதன் எதிரொலியாக கொடைக்கானல் நகர நில அளவை துறை மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று பேத்துப்பாறை பகுதிக்கு நேற்று சென்றனர். அங்கு நடிகர்கள் பாபி சிம்ஹா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் கட்டியுள்ள வீட்டை அளவீடு

செய்தனர்.இதுதொடர்பான அறிக்கை வருவாய்த்துறை உயர் அதிகாரிகளிடம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே வில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாக்கியலட்சுமி ராமச்சந்திரன் கூறுகையில், நடிகர் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் கட்டுகிற 2 கட்டிடங்களுக்கும் இதுவரை அனுமதி அளிக்கவில்லை. இதுதொடர்பாக ஊராட்சி ஒன்றியத்தின் அனுமதி பெற்று விரைவில் நோட்டீஸ் வழங்கப்படும் என்றார்.   இந்தநிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் கட்டியுள்ள வீட்டின் அருகே யானைகளின் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று மாலை வனத்துறை சேர்ந்த உயர் அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு நடத்திவிட்டு சென்றார்கள்.விரைவில் அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!