Skip to content

‘மிரட்டலுக்கு அடிபணிபவன் நான் இல்லை’ விஜய் கட்சிக்கு அமீர் பதிலடி

நாதக ஒருங்கிணைப்பாளர்  சீமான், தந்தை பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை கூறி வருகிறார். இதற்கு பல்வேறு கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்த  நிலையில்  தவெக தலைவர் விஜய் இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் இயக்குனர் அமீர்,  சீமானுக்கு  நடிகர் விஜய் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என  தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.  இதை அறிந்த விஜய் கட்சிக்காரர்கள்  அமீருக்கு  போனில் மிரட்டல் விடுத்தார்களாம்.  அவரது உதவியாளரையும் தொடர்பு கொண்டு  மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த மிரட்டல் குறித்து கருத்து தெரிவித்த  இயக்குனர்அமீர் ‘தம்பிகளின் மிரட்டலுக்கு அடிபணியும் அண்ணன் நான் இல்லை’ என  கூறி உள்ளார்.

error: Content is protected !!