Skip to content

திருச்சியில் ஓட்டல் உரிமையாளரிடம் தகராறு.. 2 பேர் கைது…

திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (35) இவர் உறையூர் நாச்சியார் கோவில் சாலையில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 16ந்தேதி இரவு 3 பேர் கருப்பு சாமியின் ஓட்டலுக்கு சாப்பிட வந்தனர். அப்போது அவர்களுக்கு சாப்பிட இருக்கை இல்லாததால் ஒட்டல் ஊழியரிடம் கேட்டுள்ளனர். அதற்கு 5 நிமிடம் காத்திருக்குமாறு கூறி உள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அந்த 3 பேர் ஒட்டலில் இருந்த பொருட்களை ஹெல்மெட்டால் அடித்து நொறுக்கியும், ஓட்டல் ஊழியர் ஒருவரை கன்னத்தில் அறைந்தும் மிரட்டி உள்ளனர். இது குறித்து கருப்புசாமி உறையூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து உறையூர் பகுதியை சேர்ந்த ரவுடி அப்பாஸ் என்கிற பாலகுமார் (32) , பரணி குமார் (32) ஆகியோரை கைது செய்தனர். மேலும் கார்த்திக் (28) என்பவரை தேடி வருகின்றனர்.

நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் மயங்கி விழுந்து சாவு

திருச்சி கே கே நகர் உடையான்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (42. )இவர் தேசிய நெடுஞ்சாலைத்துறையில் உதவி பொறியாளராக பணி புரிந்தார். இந்த நிலையில் கடந்த 16 ந்தேதி தென்றல் நகர் மதுபான கடை அருகே மயங்கி விழுந்து கிடந்தார். இதை கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!