Skip to content

ஒன்றுபட்டு உழைத்தால் திமுக கூட்டணி மகத்தான வெற்றி

அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் அக் கட்சியின் தேசிய செயலாளர்
திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக் தேர்வு செய்யப்பட்டார்.இதை யடுத்து கிறிஸ்டோபர் திலக் எம்பி திருச்சி மாநகரில் உள்ள காந்தி, காமராஜர், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் சிலைக்கு காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்விற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கவுன்சிலர் எல்.ரெக்ஸ் தலைமை தாங்கினார்.தெற்கு மாவட்ட தலைவர் கே.ஆர்.ஆர் , வடக்கு மாவட்ட தலைவர் தொட்டியம் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த நிகழ்வில் முன்னாள் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் கோவிந்தராஜன், மாவட்ட பொருளாளர் முரளி,கோட்டத் தலைவர்கள் ராஜா டேனியல் ராய்,பிரியங்கா பட்டேல்,மலர் வெங்கடேசன்,அழகர்,ஜெயம் கோபி,கனகராஜ்,
காமராஜர் பேரவை மாவட்ட தலைவர் சிவாஜி சண்முகம்,
மனித உரிமை துறை எஸ்.ஆர் ஆறுமுகம், கலைப்பிரிவு அருள்,
மகளிர் அணி ஷீலா செலஸ், அஞ்சு,விஜயலட்சுமி,
அமைப்புசாரா மகேந்திரன், ஐ.டி.பிரிவு கிளமெண்ட் ,மாவட்ட பொதுச் செயலாளர் நாச்சிகுறிச்சி அருண் பிரசாத்
மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கிறிஸ்டோபர் திலக் எம்.பி.க்கு பாராட்டு விழா நடைபெற்றது. அதன் பின்னர் கிறிஸ்டோபர் திலக் எம்.பி அருணாச்சலம் மன்றத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

மாநிலங்களவைக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டாலும்,திருச்சி மக்களின் தேவைகளுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்.அனைவருடனும் ஒருங்கிணைந்து மக்கள் பணியாற்றுவேன். கேஸ் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.மத்திய அரசு உடனடியாக விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் போடுவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.மக்கள் தெருவுக்கு வரும் இல்லை ஏற்பட்டுள்ளது.அதனால் பெரிய பிரச்சனை உருவாகும்.கடந்த 50 ஆண்டு கால வரலாற்றில் குறிப்பிட்ட நெருக்கடி நிலை வரவில்லை.
கச்சா எண்ணெய் பிரச்சனை எப்போதும் வந்ததில்லை.
ஏற்கனவே தமிழகம் போன்ற மாநிலங்களில் மின் தேவை அதிகம் உள்ளது. இதனால் மின்சார அடுப்புக்கு மாறும் பட்சத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படும் மத்திய அரசும் அதற்கான மானியங்களை மாநில அரசுகளுக்கு
வழங்காது.
நாம் ஒற்றுமையாக உழைத்தால் திருச்சி மாவட்டத்தில் ஒன்பது சட்டமன்ற தொகுதிகளிலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றியைப் பெரும்.

இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்டத் தலைவர்கள் எல்.ரெக்ஸ், கே.ஆர்.ஆர்.ராஜலிங்கம், தொட்டியம் சரவணன், முன்னாள் மாவட்ட தலைவர் வக்கீல் கோவிந்தராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!