Skip to content
Home » 21 திமுக வேட்பாளர் பட்டியல்…… பெரம்பலூரில் அருண் நேரு…… 11 பேர் புதுமுகங்கள்

21 திமுக வேட்பாளர் பட்டியல்…… பெரம்பலூரில் அருண் நேரு…… 11 பேர் புதுமுகங்கள்

  • by Senthil

தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.  இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்கி 27-ந் தேதி வரை நடக்கிறது. தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய 3 கூட்டணிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தி.மு.க. போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலையும்,  தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினர் வடிவமைத்த நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையையும் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (புதன்கிழமை)  காலை வெளியிட்டார்.

அதன்படி 21 தொகுதி  திமுக வேட்பாளர் விவரம் வருமாறு:

வட சென்னை-  டாக்டர் கலாநிதி வீராசாமி,

மத்திய சென்னை- தயாநிதி மாறன்,

தென் சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன்,

தூத்துக்குடி- கனிமொழி,

ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு,

காஞ்சீபுரம் (தனி) – ஜி.செல்வம்,

அரக்கோணம்- எஸ்.ஜெகத்ரட்சகன்,

திருவண்ணாமலை- சி.என்.அண்ணாதுரை,

வேலூர்- கதிர் ஆனந்த் (அமைச்சர் துரைமுருகன் மகன்),

கள்ளக்குறிச்சி-  மலையரசன்,

நீலகிரி (தனி) – ஆ.ராசா,

பொள்ளாச்சி-  ஈஸ்வரசாமி,

தஞ்சை- முரசொலி

பெரம்பலூர்-  அருண் நேரு(  அமைச்சர் கே. என். நேருவின் மகன்)

ஆரணி-தரணிவேந்தன்

தேனி- தங்க தமிழ்ச்செல்வன்,

தென்காசி(தனி)- டாக்டர் ராணி  குமார்

தர்மபுரி-  ஆ. மணி

சேலம்-  செல்வகணபதி,

கோவை-  கணபதி ராஜ்குமார்

ஈரோடு- பிரகாஷ்

திமுக வேட்பாளர்களில் 10 பேர் தேர்தல் களத்திற்கு புதுமுகம்.  11 பேர் ஏற்கனவே  எம்.பியாக உள்ளவர்கள். கடந்த முறை திமுகவில் 2 பெண் எம்.பிக்கள் இருந்தனர். இந்த முறை திமுகவில் 3  பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கை வெளியிட்டு முதல்வர்  ஸ்டாலின் பேசியதாவது:

சொன்னதை செய்வோம், செய்வதை  சொல்வோம் என்ற அடிப்படையில் திமுக செயல்பட்டு வருகிறது.  நாடாளுமன்ற தேர்தல் மூலமாக  ஒன்றியத்தில் புதிய ஆட்சி அமையும்.  அது மாநில அரசுகளை மதித்து அரவணைத்து செல்லும் ஆட்சியாக அமையும். சமத்துவ ஆட்சியாக, சகோதரத்துவ  ஆட்சியாக அமையும்.  மக்களாட்சி மாண்பை செம்மைப்படுத்தும் ஆட்சியாக அமையும்.  திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டுக்கு செயல்படுத்தும் திட்டம் போல இந்தியா முழுமைக்கும் செய்வோம்.

பாஜக அரசு இந்தியாவை பாழ்படுத்தி விட்டது. கனிமொழி தலைமையிலான குழு இந்த அறிக்கையை நன்றாக  தயாரித்து உள்ளது. கனி்மொழி தலைமையிலான இந்த குழுவுக்கு நெஞ்சார்ந்த பாராட்டு.  மாநிலங்கள்  உண்மையான  மாநில முதல்வர்கள் கருத்து கேட்டு  கவர்னர்கள் நியமிக்கப்பட வேண்டும். கவர்னர்களின் அதிகாரங்கள் குறைக்கப்படும். கவர்னருக்கு அதிக அதிகாரம் தரும் சட்டப்பிரிவு நீக்கப்படும்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.   மாநிலங்கள் சுயாட்சி பெற  சட்டங்கள் திருத்தப்படும்.  தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்படும்.  திருக்குறள் தேசிய  நூலக அறிவிக்கப்படும். புதிய கல்விக்கொள்கை ரத்து செய்யப்படும்.

நாடாளுமன்ற, சட்டமன்ற  தேர்தலில் பெண்களுக்கு 33 % உடனடியாக  அமல்படுத்தப்படூம். இந்தியா முழுவதும் மகளிருக்கு  மாதம் ஆயிரம் ரூபாய்  உரிமைத்தொகை வழங்கப்படும். பாஜகவின் தொழிலாளர் விரோத சட்டம் நீக்கப்படும்.

வங்கிகள்  பிடித்தம் செய்யும் அபராத தொகை நீக்கப்படும். இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். தொகுதி சீரமைப்பில் தமிழ்நாட்டின் முக்கியத்துவம் குறையாமல் பாதுகாக்கப்படும். நெடுஞ்சாலை  சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.  டீசல்்(65ரூபாய்), பெட்ரோல்(ரூ.75) விலை குறைக்கப்படும்.

ஊரக வேலைவாய்ப்பு நாட்கள் 150 நாளாக அதிகரிக்கப்படும்.  பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது.  கல்விக்கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்ைக எடுக்கப்படும். சிலிண்டர் விலை ரூ.500 ஆக குறைக்கப்படும். ரயில்வே கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படும்.  சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்கப்படும்.  ரயிலில் மூத்த குடிமக்களுக்கு சலுகை வழங்கப்படும்.  ஜிஎஸ்டி  சட்டம் திருத்தம் செய்யப்படும்.  சென்னையில் 3வது ரயில் நிலையம் அமைக்கப்படும்.  பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது.

இவ்வாறு அவர் பேசினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!