முன்னாள் அமைச்சரும், திமுகவின் முக்கிய பேச்சாளராகவும் திகழ்ந்த மறைந்த ரகுமான் கான் எழுதிய இடி முழக்கம் உ்ளிட்ட 6 நூல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது .நூல்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன், துணை முதல்வர் உதயநிதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நூல்களை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தேனியில் பிறந்த ரகுமான் கான் அமெரிக்கன் கல்லூரி, சென்னை சட்ட கல்லூிகளில் படித்தார். முன்னாள் அமைச்சர் காளிமுத்து வுடன் இணைந்து மொழி போராட்டத்தில் ஈடுபட்டார். மறைந்த முரசொலி செல்வத்துட்ன நெருங்கி பழகியவர். தேனியில் வழக்கறிஞர் தொழில் நடத்த நினைத்த ரகுமான் கானை சென்னைக்கு அழைத்துவர் கலைஞர். அந்த பணியை அவர் நிறைவேற்றினார். பல்லவன் போக்குவரத்து கழகம் , மாநகராட்சிகளில் வழக்கறிஞராக இருந்தார். மக்களின் நம்பிக்கை பெற்றவர். 1977 , 80 , 84 ஆகிய தேர்தல்களில் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றார். 89 ல் பூங்கா நகர், 96ல் ராமநாதபுரத்தில் இருந்து வெற்றி பெற்றவர். தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தார். சிறுசேமிப்பு துணைத்தலைவராக 2 முறை இருந்தார். திமுகவின் செய்தி தொடர்பு செயலாளராக இருந்தவர்.
இறுதி மூச்சுவரை கழகத்தில் இருந்தார். இன்னும் நம் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஒரு முறை வீடியோ காலில் என்னுடன் அவர் பேசினார். அப்போது திமுகவுக்கு அவர் தேவை என சொன்னேன். அவர் கண் கலங்கினார். அதன் பிறகு சில காலத்தில் அவர் மறைந்தார். எம்.ஜி.ஆர் பல முறை அழைத்தும் அவர் போகவில்லை சின்ன சஞ்சலம் கூட அவர் அடையவில்லை. 2முறை வெடிகுண்டு வீசினர். கத்தி அரிவாளுடன் வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது ரகுமான்கானை பார்க்க கலைஞர் வீட்டுக்கே வந்து விட்டார். இது தான் கலைஞர்.
நாம் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது, எம்ஜிஆர் முதல்வர். அப்போது துரைமுருகன், ரகுமான்கான், சுப்பு தான் இடி, மின்னல் மழை என பதிவு செய்தார்கள். சட்டமன்றத்தில் இவர்கள் கேள்வி எழுப்பினால் சட்டமன்றம் அதிரும். எனவே அவர்கள் மூவரையும் மக்கள் மன்றத்தில் பேச அனுப்பி வைத்தோம். கட்டுக்கடங்காத கூட்டம். இவர்கள் உரையாற்ற அரங்கம் ஏற்பாடு செய்தனர். காசு கொடுத்து டிக்கெட் வாங்கி மக்கள் பேச்சை கேட்டனர். ரகுமான்கானின் நடை உடை வித்தியாசமாக இருக்கும். தலையை 5 நிமிடத்தில் சீவி விடுவார். முடியை சுருட்டி விட 10 நிமிடம் எடுப்பார். அந்த சுருள் முடி குறித்து கலைஞர் கூட பேசி உள்ளார்.
அதிமுக ஒரு விஷயத்தில் இரட்டை நிலைப்பாடு எடுத்தது. இது குறித்து சட்டமன்றத்தில் பேசிய ரகுமான் கான் சின்னமோ இரட்டை நிலை , நிலையோ இரட்டை நிலை என்றார். உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று மக்களவையில் ஒரு மசோதா தாக்கல் செய்தார். நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்த இந்த கருப்பு சட்டம் கொண்டு வந்துள்ளார் அமித்ஷா, ஏற்கனவே சிறுபான்மை மக்களுக்கு எதிராக பல சட்டங்கள் கொண்டு வந்தனர். இப்போது இந்த கருப்பு சட்டத்தை கொண்டு வந்து உள்ளனர். இதை எதிர்ப்போம். மக்கள் கவனத்தை திசை திருப்ப, நாட்டை ஜனநாயக பாதையில் இருந்து திசை திருப்ப இப்படி செய்கிறார்கள். நீங்கள் இந்த 6 புத்தகங்களை நீங்கள் வாங்கி படிக்கணும், குறிப்பாக சட்டமன்ற உரையை வாங்கி படிக்கணும். ரகுமான் போன்ற இடி முழக்கங்கள் பலர் உருவாகணும். மற்ற அணியினரும் இதுபோல பல முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும்.
கட்சியில் எத்தனை கோடி பேர் சேர்ந்தாலும், அவர்களை கொள்கை பிடிப்பு உள்ளவர்களாக உருவாக்க வேண்டும். ரகுமான் கானின் திராவிட சிந்தனை இருக்க வேண்டும். இந்த நூல்களை ரகுமான்கான் மகன் சுபைர்கான் உருவாக்கி கொடுத்து இருக்கிறார். ரகுமான்கானின் மகனும் ரகுமான் வழியை பின்பற்றுவர் என எனக்கு தெரியும் சிறப்பாக பணியாற்றுகிறார். அந்த குடும்பத்துக்கு திமுக எப்போதும் துணை நிற்கும் . திமுக இருப்பது உங்களுக்கு தான். சிறுபான்மை மக்களுக்கு என்றும் திமுக துணை நிற்கும். வாழ்க ரகுமர்கான் புகழ். வளர்க அவரது மகன் பணி.
இவ்வாறு அவர் பேசினார்.