Skip to content

திமுக–காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது” – செல்வப்பெருந்தகை உறுதி!

தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக சார்பில் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு பங்கேற்றது. காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ராஜேஷ்குமார், நிவேதிக் ஆல்வா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையில் திமுக காங்கிரஸுக்கு 25 தொகுதிகளை ஒதுக்க முன்வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் காங்கிரஸ் கட்சி 39 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா இடத்தை வலியுறுத்தி பிடிவாதம் காட்டியதால் உடன்பாடு எட்டப்படவில்லை. இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் பேச்சுவார்த்தை முடிவின்றி நிறைவடைந்தது.

காங்கிரஸ் தரப்பில் “ஆட்சி பங்கு” என்ற முழுக்கம் மற்றும் மாறுப்பட்ட கருத்துகள் திமுக தலைமையை சங்கடத்தில் ஆழ்த்தியதாகவும், இதனால் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகின. ஆனால் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இதை மறுத்து, “திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. எந்த குழப்பமும் இல்லை” என்று தெளிவுபடுத்தினார்.

செல்வப்பெருந்தகை மேலும் கூறியதாவது: “இது இயற்கையான, கொள்கை சார்ந்த கூட்டணி. ஒவ்வொரு கட்சியும் கூடுதல் தொகுதிகள் கேட்பது வழக்கமானது. பேச்சுவார்த்தைக்குப் பின் நியாயமான அடிப்படையில் உடன்பாடு எட்டப்படும்.” இதனால் கூட்டணி உறுதியாக இருப்பதாகவும், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடரும் என்றும் அவர் உறுதியளித்தார்.ஒட்டுமொத்தமாக, திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. 25 vs 39 என்ற எண்ணிக்கை வேறுபாடு முக்கிய பிரச்சினையாக உள்ளது. இருப்பினும் இரு கட்சிகளும் கூட்டணியை உறுதியாக தொடர விரும்புவதாக தெரிவித்துள்ளன. அடுத்த சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!