செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். அவருடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஐஜேகேவின் பாரிவேந்தர், தமாகாவின் ஜி.கே.வாசன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஜான் பாண்டியன், புதிய நீதிக் கட்சியின் ஏ.சி.சண்முகம் மற்றும் புரட்சி பாரதம் கட்சியின் ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது… இன்னும் 2 மாதத்தில் EPS, CM ஆக பதவியேற்பார் என NDA பொதுக்கூட்டத்தில் அன்புமணி தெரிவித்துள்ளார். பல்வேறு முறைகேடுகளை சுட்டிக்காட்டி, திமுகவை கடுமையாக தாக்கிய அன்புமணி, ஊழல் என்றாலே அதற்கு மறுபெயர் திமுகதான் என்று சாடினார். CM ஸ்டாலின் எப்போது வாய் திறந்தாலும் பொய் மட்டுமே பேசுவதாக விமர்சித்த அவர், திமுக அரசு ஒரு பூஜ்ஜியம் அரசு. அதனை மக்கள் விரட்டி அடிக்க வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.

