Skip to content

வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து திருச்சியில் த.மு.மு.க. பேரணி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மண்டலம் சார்பில் மத்திய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டம் 2024 -ஐ கண்டித்து ஆர்.சி. பள்ளிக்கூடம் அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

ம.ம.க பொது செயலாளர் அப்துல் சமது எம்.எல்.ஏ. போராட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
ம.ம.க துணை பொது செயலாளர் தஞ்சை பாதுஷா கண்டன கோஷம் எழுப்பி பேரணியை துவக்கி வைத்தார்.
போராட்டத்தில் த.மு.மு.க மாநில பொருளாளர் ஷபியுல்லாஹ் கான், திருச்சி மேற்கு மாவட்ட தலைவரும்,திருச்சி மாநகராட்சி கவுன்சிலருமான
பைஸ் அகமது, கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா, புதுகோட்டை மாவட்ட தலைவர் அப்துல் கனி, கரூர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் சாகுல் ஹமீது, பெரம்பலூர் மாவட்ட தலைவர் குதரதுல்லாஹ், அரியலூர் மாவட்ட தலைவர் சாகுல், மகளீர் பேரவை மாநில பொருளாளர் ஷான் ராணி ஆலிமா, தலைமை பிரதிநிதி வழ. நூர்தீன், தாஹீர் பாஷா, சுல்தான், ஐபிபி மாநில துணை செயலாளர் முகமது ரபிக்க, ஐடி விங் மாநில துணை செயலாளர் நஜீர், தலைமை செயற்குழு உறுப்பினர் சபிர், உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.
இப்போராட்டத்தில் திருச்சி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளார்கள் இப்ராஹிம் ஷா, இலியாஸ், மமக மாவட்ட செயலாளர்கள் இப்ராஹிம், அஷ்ரப் அலி, மாவட்ட பொருளாளர்கள் ஹூமாயூன் கபிர்காஜா மொய்தீன், தலைமை கழக நிர்வாகிகள் அப்பீஸ் கான், மண்டல நிர்வாகிகள் தல்ஹா பாபு, திருச்சி உஸ்மான், முகமது கான், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட துணை செயலாளர்கள் மற்றும் அணிகளின் நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள், மகளீர் பேரவை நிர்வாகிகள், ஜமாத்தார்கள், பொதுமக்கள், திரளாக பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்தனர்.v

error: Content is protected !!