Skip to content

திமுக எம்.எல்.ஏ. பொன்னுசாமி காலமானார்… கனிமொழி இரங்கல்

சேந்தமங்கலம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி (68), உடல்நலக்குறைவால் காலமானார். திமுக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்னுசாமி, கடந்த சில நாட்களாக மாரடைப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அக்டோபர் 23, 2025 அன்று அதிகாலை, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சேந்தமங்கலம் தொகுதியில் 2011 முதல் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்ற பொன்னுசாமி, திமுகவின் உள்ளூர் அமைப்புகளை வலுப்படுத்தியவர். அவரது மறைவு, கட்சியினரிடையே பெரும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைமை, பொன்னுசாமியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின், “பொன்னுசாமி கட்சிக்கு அளித்த பங்களிப்பு மறக்க முடியாதது” என்று அஞ்சலி செலுத்தினார். அவரது உடல், சேந்தமங்கலத்திற்கு கொண்டு போகப்பட்டு, பிறகு இறுதி அஞ்சலி நடைபெறும்.

இவரது மறைவுக்கு திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது” சேந்தமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. பொன்னுசாமி அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினர் மற்றும் கழகத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!