கோவை சேரன் மாநகர் பகுதியில் சேர்ந்தவர் ஆஸ்டின். இவர் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளின் பிரியர். இவர் வீட்டில் செல்ல பிராணிகளை ஆசையாக வளர்த்து வருகின்றார். இந்நிலையில் கோவை ரத்தினபுரி பகுதியில் தனது 2 நாய் குட்டிகளுடன் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வேகமாக வந்த கார் ஒன்று நாய்கள் மீது மோதியது. இதில் ஆஸ்டின் அழைத்து சென்ற அந்த இரண்டு நாய்களுக்கும் பலத்த காயமடைந்தன. இரண்டு நாய்களும் படுகாயமடைந்த நிலையில் விபத்து நடந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இதை அடுத்து ஆஸ்டின் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .புகாரின் பேரில் போலீசார் காரை ஓட்டி வந்த ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் மீது வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பிரிவு வழக்குகளுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை , அபராதம் விதிக்க கூடும் . செல்லமாக வளர்த்த இரண்டு நாய்கள் விபத்தில் பலியான சம்பவத்தால் ஆஸ்டின் குடும்பத்தார் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.