Skip to content

முதுமலையில் வளர்ப்பு யானைகள் தேசிய கொடிகளுடன் அணிவகுப்பு..

முதுமலையில் வளர்ப்பு யானைகள் தேசிய கொடிகளுடன் அணிவகுத்து நிற்க தேசியக்கொடி ஏற்றப்பட்டது. வளர்ப்பு யானைகள் தும்பி கையை உயர்த்தி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர். நாட்டின் 79வது சுதந்திர தின விழா நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள்

காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் இன்று கொண்டாடப்பட்டது. முகாமிலுள்ள வளர்ப்பு யானைகள் தேசிய கொடிகளுடன் அணிவகுத்து நின்றன. முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா தேசியக்கொடியை ஏற்றினார். அப்போது அணிவகுத்து நின்ற வளர்ப்பு யானைகள் தும்பிக்கையை உயர்த்தி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தின. இந்த காட்சியை முகாமிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

error: Content is protected !!