அன்புமணி நாளை பாமக பொதுக்குழுவை கூட்டி உள்ளார். இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என ராமதாஸ் சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று காலை நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன் விசாரணக்கு வந்தது. அப்போது நீதிபதி, வழக்கை விசாரிக்காமல், ராமதாஸ், அன்புமணி இருவரும் இன்று மாலை 5.30 மணிக்கு தனது அறைக்கு வரும்படி வேண்டுகோள் விடுத்தார். அதனை ஏற்று அன்புமணி இன்று மாலை 5.30 மணிக்கு செல்கிறார். ஆனால் ராமதாஸ் இன்று கோர்ட்டுக்கு வரமாட்டார் என அவரது வழக்கறிஞர் கோபு கோர்ட்டில் தகவல் தெரிவித்தார். ராமதாசுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருப்பதால் அவரால் வர இயலாது என்று தெரிவிக்கப்பட்டது.
டாக்டர் ராமதாஸ் கோர்ட்டுக்கு வரமாட்டார்
- by Authour
