ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல், டிச., 4, 5, 6ல் நடைபெற உள்ளது. அகில இந்திய ரயில்வேயில் பணியாற்றும் 12.20 லட்சம் ஊழியர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள் என்பதால் அவர்களின் ஆதரவை பெற, தொழிற்சங்கத்தினர் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கோட்ட தலைமை அலுவலக வளாகத்தில், நேற்று டி.ஆர்.இ.யு., எனப்படும், தட்ஷிண ரயில்வே தொழிலாளர் சங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து, ரயில்வே தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில், கூட்டம் நடைபெற்றது. இதில் வி.சி., தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசி ஓட்டு சேகரித்தார். அவர் பேசுவதற்காக மேடைக்கு வந்த போது, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு ‘மைக் ஆப்’ செய்யப்பட்டது. இது தொடர்பாக வி.சி., நிர்வாகிகள், மின் இணைப்பு வழங்கும் பணியில் இருந்த ஊழியரிடம் இது தொடர்பாக கேட்ட போது அவர்களுக்குள் வாக்குவாதம் செய்தனர். மேலும் கூட்டம் நடத்த அனுமதிக்கப்பட்ட மதியம், 1:15 முதல் 2:15 மணி வரையான உணவு இடைவெளி நேரம் முடிந்தது, அதனால், மின் இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்டதாக ஊழியர்கள் கூறிதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த நிர்வாகிகள், அவரை தாக்க முயன்றனர். அங்கிருந்த போலீசார் இதனை தடுத்தபோது அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின் மைக் இணைப்பு தரப்பட்டு திருமாவளவன் ஐந்து நிமிடம் பேசினார்.
டி.ஆர்.இ.யூ க்கு திருமா ஆதரவு… பிரச்சாரக்கூட்டத்தில் ரயில்வே ஊழியரை தாக்க முயற்சி
- by Authour
