தஞ்சை பள்ளி அக்ரஹாரம் ஸ்ரீராம் நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு மாநகராட்சி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குடிநீர் சுத்தமின்றி மாசடைந்த நிலையில் வருகிறது. இந்த குடி நீரை குடிக்கும் பொதுமக்களுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன்காரணமாக அந்த பகுதி மக்கள் குடிநீரை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப் பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
