திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, மற்றும் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் குடிநீர் குழாய் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாருதி சுசூகி ஷோ ரூம் அருகே உடைப்பு ஏற்பட்டதால் அதனை சரி செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது . எனவே மேற்கண்ட நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் செல்லும் இடங்களான, தேவதானம்,விறகுப்பேட்டை, மகாலட்சுமி நகர், சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, அரியமங்கலம் உக்கடை, தெற்கு உக்கடை,ஜெகநாதபுரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் இன்று மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது.
31.07.2025 அன்று முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சி மாநகராட்சி ஆணையர் லி .மதுபாலன் கேட்டுக் கொண்டுள்ளார்.