Skip to content

போதை ஒழிப்பு.. திருச்சி-மதுரை நடைப்பயணம்-மதிமுக வைகோ தகவல்

வைகோ தலைமையில் ‘சமத்துவ நடைப்பயணம்’ — போதை ஒழிப்பு, சாதி மோதல் தடுப்பு கோரிக்கையுடன் ஜனவரி 2 முதல் 12 வரை திருச்சி–மதுரை 180 கி.மீ நடைபயணம்..

தவெக தலைவர் விஜய்–கரூர் சம்பவம் குறித்து கடும் விமர்சனம்..

போதைப் பொருள் ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி நடைப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி..

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில், போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சாதி மோதல் தடுப்பு குறித்து அடுத்த வருடம் ஜனவரி 2 முதல் 12 ஆம் தேதி வரை திருச்சி முதல் மதுரை வரை 180 கி.மீ நீளம் ‘சமத்துவ நடைப்பயணம்’ நடைபெற உள்ளதாக
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார்..

இந்த நடைபயணத்தில் பங்கேற்க உள்ள
சென்னை மண்டல வீரர்கள் தேர்வு
இன்று வைகோ தலைமையில் நடைபெற்றது. கட்சியின் தொண்டரணி, இளைஞரணி, மாணவரணி என மொத்தம் 150 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டதாக வைகோ தெரிவித்தார்…

செய்தியாளர்களை சந்தித்த வைகோ…

“நான் தொடங்கும் இது 11-வது நடைப்பயணம். போதைப் பழக்கமுள்ளோர், மது அருந்துபவர்கள் இந்த நடைபயணத்தில் சேர அனுமதிக்கப்பட மாட்டார்கள். போதைப் பொருள் ஒரு மனிதனை மிருகமாக மாற்றுகிறது. கல்லூரிகள், உயர்கல்வி நிறுவனங்களில் போதை அதிகமாக பரவிவிட்டது.

பஞ்சாப் போதைப் பொருளால் நாசமடைந்ததை நாம் பார்க்கிறோம்.. கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் வைத்திருந்தால் குறைந்தபட்சம் 10 ஆண்டு சிறை, பயன்படுத்தினால் 7 ஆண்டு சிறை புதிய சட்டம் கொண்டு வர வேண்டும், அதனை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.”

“நடைபயணத்தில் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள்” நடைபயணத்தில் மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் முழுமையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நான் விரும்புவது என் எஞ்சிய நாட்களை மக்களுக்காக வாழ்வதே.. “மன்னாதி மன்னன், லட்சியமே கொள்ளடா போன்ற எனக்கு பிடித்த பாடல்களை நடைபயணத்தின் போது ஒலிப்போம். கல்லூரிகளில் சாதி சங்கங்கள் உருவாகி போராட்டங்கள், அருவாள் வீச்சு நடந்து கொண்டிருப்பது கவலைக்குரியது.. இதை தடுப்பதற்காகத்தான் இந்த பயணத்திற்கு ‘சமத்துவ நடை’ என பெயர் வைத்தேன், என்று வைகோ குறிப்பிட்டார்.

ஜனவரி 2 திருச்சி மார்க்கெட் அருகே முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார், மேலும், காதர் மொய்தீன், செல்வ பெருந்தகை, திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.. மதுரையில் நிறைவு நிகழ்வில் வைரமுத்து, நடிகர் சத்யராஜ், திருமுருகன் காந்தி மற்றும் கூட்டணி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

தமிழக மக்கள் நலத்திட்டங்களை மற்ற மாநிலங்களே பின்பற்றுகின்றனர். வரும் சட்டமன்றத் தேர்தலிலும் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் ஆட்சி அமைப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை,
என்று கூறினார். விஜய்–கரூர் சம்பவம் குறித்து வைகோ கடும் விமர்சனம். கரூர் நிகழ்ச்சியில் 41 பேர் உயிரிழந்த விபத்துக்கு விஜய் சரியாக பொறுப்பேற்கவில்லை. பெரிய மக்கள் கூட்டம் வந்தால்
அவர்களை பாதுகாப்பது தலைவரின் பொறுப்பு, சம்பவத்திற்கு பிறகு குற்ற உணர்ச்சியோ கூட இல்லை. உயிரிழந்தோரின் வீடுகளுக்கு உடனே சென்று ஆறுதல் கூற வேண்டும். நாட்கள் கடந்த பிறகு அழைத்து சந்திப்பது சரியல்ல, இவை எல்லாம் புதிய தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய அரிச்சுவடி பாடங்கள். “முதல்வரை அழைத்தேன் அவர் திருச்சிக்கு வந்து நடைபயணத்தை தொடங்கி வைப்பதாக தெரிவித்தார்,” என்று கூறினார்.

error: Content is protected !!