Skip to content

போதை மாத்திரை விற்பனை.. கார் எரிந்து நாசம்… திருச்சி க்ரைம்

  • by Authour

கார் எரிந்து நாசம்

திருச்சி காஜாமலை குடுமியான் சாகில் தெருவை சேர்ந்தவர் முகமது இப்ராகிம் ( 41), இவரது காரை வீட்டில் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி இல்லை. அதனால் காஜா மலை காலனி அருகே நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் கடந்த 20ம் தேதி இவரது கார் எரிந்து கொண்டிருப்பதாக நண்பர் தகவல் அளித்தார் இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போது கார் முழுவதுமாக எரிந்து சேதமானது. இந்த தீ விபத்து சம்பவம் குறித்து கே.கே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் சிறுவர்கள் அருகிலேயே வெடி வெடித்ததால் தீ விபத்து நடந்ததாக தெரிய வந்தது.

ஆடுகளை திருட முயன்ற 2 பேர் கைது

திருச்சி எடமலைப்பட்டி புதூர் மேல வடக்கு தெருவை சேர்ந்தவர் தருண்குமார் (22).இவர் ஆடு,மாடுகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் எடமலைப்பட்டி புதூர் கீழ வடக்கு வீதி அருகே உள்ள காலியான இடத்தில் இவரது ஆடு, மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது . அப்போது, ​​மர்ம நபர்கள் ஒரு ஆட்டோவில் அங்கு வந்து ஆடுகளை ஆட்டோவில் ஏற்றி ஆடு திருடினர். அப்பொழுது இதனை பார்த்த பொதுமக்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து ஆடுகளை கீழே இறக்கிவிட்டு அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப்பதிந்து பாலக்கரை கெம்ம்ஸ்டவுன் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த நெல்சன் (31) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஹரிஷ் சகாயராஜ் (33) இருவரை கைது செய்தனர் . மேலும் அவரிடம் இருந்த ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

போதை மாத்திரை விற்ற 2 ரவுடிகள் உட்பட 3 பேர் கைது

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் நேற்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது பூக்கொல்லை பகுதியில் போதை மாத்திரை விற்றதாக உறையூர் பாளையம் பஜாரை சேர்ந்த முகமது ஸைப்(வயது 28), வரகனேரி சந்தானபுரம் பகுதி சேர்ந்த அசன் அலி ( 27 ) ஆகிய 2 ரவுடிகள் மற்றும் மகாலட்சுமிநகரை சேர்ந்த ஹஜிபுதின் (25) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த 190 போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!