திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.இதைக் கட்டுப்படுத்த போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு அதிரடியாக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.இருப்பினும் போதை மாத்திரைகள் மாநகரில் ஒழிந்த பாடில்லை
.இந்நிலையில் திருச்சி கோட்டை போலீஸ் சரகம் கரூர் பைபாஸ் ரோடு பகுதியில் ஒரு பள்ளி அருகே போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.இதையடுத்து கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று, போதை மாத்திரைகள் விற்றதாக திருச்சி மேல சிந்தாமணியை சேர்ந்த சிவகுரு (வயது 24) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 போதை மாத்திரைகள், சிரஞ்சு மற்றும் தண்ணீர் பாட்டில் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவர் ரவுடி பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது .இதேபோல் காந்தி மார்க்கெட் போலீஸ் சரகம் தாராநல்லூர் பகுதியில் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் அதிரடி வேட்டை நடத்தி, போதை மாத்திரைகள் விற்றதாக வரகனேரியைச் சேர்ந்த அசன் அலி (வயது 27), முகம்மது யாசர் (வயது 25) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 600 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் இருவரும் ரவுடி பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
