கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் நேற்று செட்டிக்குளம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி பஸ்ஸை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், மினி பஸ் ஓட்டுநரான கொடுப்பைக்குழி பகுதியைச் சேர்ந்த ஜெபர்சன் (48) என்பவர் மதுபோதையில் பஸ்சை ஓட்டியது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அந்த மினி பஸ்ஸை பறிமுதல் செய்தனர். மேலும் மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக ஓட்டுநர் ஜெபர்சனுக்கு ரூ.17,000-ம், இதற்குப் பொறுப்பான நடத்துநருக்கு ரூ.10,500-ம் என மொத்தம் ரூ.27,500 அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

