திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கூத்தாண்ட குப்பம் பகுதியைச் சேர்ந்த துணைத்தலைவர் முருகன் (43) இவர் சென்னை பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை கேத்தாண்டப்பட்டி சுகர் மில் அருகே கிருத்திகா ஹோட்டல் மற்றும் ஆவின் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய கடையில் வாணியம்பாடி காதர்பேட்டை பகுதியைச் சேர்ந்த இக்பால் மகன் இம்தியாஸ் (19) என்பவர் டி மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஐந்து பேர் மது போதையில் டீக்கடைக்கு வந்து இம்தியாஸிடம் ஓசியில் டீ கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது பணம் கொடுத்தால் மட்டுமே டீ தருவேன் என இம்தியாஸ் கூறியதன் காரணமாக ஆத்திரமடைந்த
வாலிபர் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த பட்டக்கத்தியை எடுத்து இம்தியாஸை தாக்கி ரகளையில் ஈடுபட்டனர். இதனை அறிந்த டீக்கடை உரிமையாளர் முருகன் சம்பவ இடத்திற்கு வந்து டீ மாஸ்டரை நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இது குறித்து நாட்றம்பள்ளி போலீசருக்கு தகவல் தெரிவித்தனர் இதனால் பயந்து போன மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர் மேலும் இருசக்கர வாகனம் மற்றும் பட்டா கத்தியை அங்கே விட்டு சென்றனர். இதனை நாட்றம்பள்ளி போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். ஓசியில் டீ கேட்டு டீ மாஸ்டரை தாக்கி கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் விசாரணையில் குணா என்பதும் அவருடைய இருசக்கர வாகனத்தில் கில்லர் குணா எனவும் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..