Skip to content
Home » திருச்சியில் மின்னணு ரோந்து பணி…. எஸ்.ஐகளுக்கு லேப்டாப்….கமிஷனர் வழங்கினார்

திருச்சியில் மின்னணு ரோந்து பணி…. எஸ்.ஐகளுக்கு லேப்டாப்….கமிஷனர் வழங்கினார்

  • by Senthil

திருச்சி மாநகர காவல் நிலையங்களில் காவல் நிலைய பணிகள், கோப்புகள், ரோந்து பணிகள் மற்றும் காவல் பணிகள் வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப நவீனபடுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தமிழக காவல்துறையில், ரோந்து பணிகளை நவீனபடுத்த, “ஸ்மார்ட் காவலர்” செல்போன் செயலி (Smart Kavalar App) மூலம் மின்னணு ரோந்து பணி (E- beat) முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

ரோந்து பணிகள் மற்றும் செயல்பாடுகளை டிஜிட்டல் முறையில் நிர்வகிப்பதற்கும், ரோந்து மற்றும் களக்காவல் பணிகளை மிகவும் திறம்படச் செய்வதற்கும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான நோக்கத்துடன்,

மின்னணு ரோந்து பணிகளை அமல்படுத்துவதற்கு காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் நிலைய எழுத்தர்களுக்கு 30 கையடக்க கணினிகள் (Tablets) வழங்கப்பட்டது.

இந்த கையடக்க கணிணி ரோந்து பணியில் சந்தேக நபர்களை விசாரணை செய்தல், சந்தேக வாகனங்களை பரிசோதனை செய்தல், மூத்த குடிமக்கள் வீடுகளை சரிபார்த்தல் போன்ற பணிகளையும் கண்காணிக்க வசதி உள்ளது. இக்கருவியில் ஆங்கிலம் மற்றும் தமிழில் வாசகங்களை படிக்கவும், டைப் செய்யும் சிறப்பம்ச வசதி கொண்டது.   கையடக்க கணினி வழங்கும் இந்நிகழ்ச்சியில், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் தலைமையகம், மற்றும்  சட்டம் & ஒழுங்கு ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!