சென்னை சவுகார்பேட்டைக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் உள்ள நகைக்கடைகளில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை . மோகன்லால் என்ற நகை வியாபாரிக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய கடைகளில் சோதனை நடைபெற்றது. மோகன்லால் ஜுவல்லர்ஸில் 4 வாகனங்களில் வந்த அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். அதேபோல் வீரப்பன் தெருவில் உள்ள டி.பி. கோல்டு, பார்ஸ்வி ஆகிய நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக திருச்சியில் ஜாபர்ஷா தெரு மற்றும் பெரியகடை, சின்ன கடை வீதிகளில் உள்ள ரூபி ஜூவல்லர்ஸ், நியூ ஒரிஜினல் ஜூவல்லர்ஸ், விக்னேஷ் ஜூவல்லர்ஸ், சக்ரா ஜெயின்ஸ் ஜூவல்லர்ஸ் ஆகிய இடங்களிலும் அமலாக்கத்துைற நேற்று மாலையில் இருந்து அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்..