Skip to content

திருச்சியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி

அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி  தமிழ்நாடு முழுவதும்  சுற்றுப்பயணம் செய்து  பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.  அதன்படி வரும் 26-ந் தேதி அவர் சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய சட்டசபை தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்வதாக இருந்தது. தற்போதுஅதனை 29-ந் தேதிக்கு ஒத்திவைத்திருப்பதாக அதிமுக. தலைமைக்கழகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருக்கிறது. ஆனால்  மாற்றத்திற்கான காரணங்கள் ஏதுவும் கூறப்படவில்லை.

வரும்  26ம் தேதி  பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.  அன்று இரவு தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திருச்சி வந்து தங்குகிறார். மறுநாள்(27ம் தேதி) காலை  பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம்  கங்கைகொண்ட சோழபுரம் செல்கிறார். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் திருச்சி வந்து, டெல்லி செல்கிறார்.

எனவே   26ம் தேதி இரவு அல்லது 27ம் தேதி பிரதமர் மோடியை,  எடப்பாடி சந்திக்க திட்டமிட்டு உள்ளார்.  இதற்காகத்தான் அவரது சுற்றுப்பயண திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  அதிமுக, பாஜக கூட்டணி ஏற்பட்ட பிறகு இதுவரை பிரதமர் மோடியை எடப்பாடி சந்திக்கவில்லை.

தற்போது  பாஜகவின் கூட்டணி ஆட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதால்,  இது குறித்து  பிரதமர் மோடியை சந்தித்து பேச அவர் திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.

error: Content is protected !!