மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விரக்தியின் விளிம்பில் இருக்கிறார். பாஜகவை தூக்கி சுமக்கும் சுமையின் பாரம் தாங்காமல் பிதற்றத் தொடங்கியுள்ளார்: போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி.
அரியலூரில் 14 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்த பின் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விரக்தியின் விளிம்பில் இருக்கிறார். முதல் நாள் பேசியதை, மறுநாள் மறுத்து பேசுகிறார். அடுத்த நாள் வேறொரு புதுக் கதையை, அவரே திரித்து பேசுகிறார். தான் பேசியதையே வேறு யாரோ கண், காது, மூக்கு வைத்து திரித்து பேசுவதாக அவரே பேசுகிறார். பாஜக அவரது தோளில் ஏறி உட்கார்ந்து கொண்டு, பாஜகவை
கொள்கைகளை இவர் பேசுகின்ற சூழலில் கொண்டு வந்து விட்டனர். எனவே அவர்களை தூக்கி சுமக்கின்ற சுமையின் வலி தாங்காது இப்படி பேசுகிறார்.
திமுகவின் கூட்டணி கட்சிகள் வலுவாக இருப்பதை பார்த்து எல்லோரையும் விமர்சனம் செய்யும் நிலைக்கு வந்து விட்டார். அவர் நினைப்பது நடக்கவில்லை. அவர் எதிர்பாராத சுமையை சுமப்பதால் விரக்தியின் விளிம்பில் நின்று இதையெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். மேலும் ஆடு-மாடுகள் முன்பு உரை நிகழ்த்திய சீமான் குறித்த கேள்விக்கு பதிலளித்த போது…
சீமானின் நிலை இப்படி ஆகிவிட்டது என்பதை நினைக்கும் போதே, பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது. அவர் மனிதனையே மனிதனாக நினைத்து பேச மாட்டார். மாக்களாகத்தான் நினைத்து வாய்க்கு வந்தபடி பேசுவார்.
அதன் உச்சமாக அவரது உண்மை நிலையை வெளிப்படுத்தும் விதமாக, அந்த காட்சிகளை பார்ப்பதற்கு தமிழ்நாட்டு மக்கள் விழுந்து விழுந்து சிரிக்கும் சூழலை ஏற்படுத்தி விட்டார். அவரது கடைசி கட்டம் நெருங்கிக் கொண்டிருப்பதை இது காட்டுகிறது என செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.