அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். நேற்று இரவு அவர் கும்பகோணத்தில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தற்போது 18000 நெல் மூட்டைகள் நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக செய்திகளில் பார்த்தேன். மழை பெய்தால் அந்த நெல் மூட்டைகளில் இருந்து நெல்மணிகள் முளைத்து விடும் உள்ளது. இது குறித்து இந்த ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லை. விவசாயிகளை பார்ப்பதில்லை, மக்களையும் பார்ப்பதில்லை.
மீண்டும் அதிமுக அரசு உங்களின் துணையோடு மலரும். அந்தக் கோயில் நிலத்தில் பல ஆண்டுகளாக குடியிருந்து வருபவர்களுக்கு அந்த வீட்டுமனை அவர்களுக்கே சொந்தமாகும் நடவடிக்கையை அதிமுக அரசு எடுக்கும்.
நெசவாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தோம். இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. நெசவாளர்களுக்கு வீடுகள் கட்டித் தந்தோம். கைத்தறி ஆதரவு திட்டத்திற்கு ரூ.120 கோடி மானியம் வழங்கினோம்.
அதேபோல் கைத்தறி துணிகள் அதிகம் நெய்யப்பட்டு விற்பனையாகாமல் தேங்கி இருந்ததை நெசவாளர்கள் தெரிவித்தனர். மானியம் வழங்க வேண்டும் என கேட்டனர். அவர்களின் கோரிக்கையை இது 300 கோடி ரூபாய் மானியம் வழங்கினோம். அந்த கைத்தறி துணிகள் அனைத்தையும் விற்பனை செய்வதற்கு ரூ.300 கோடி வழங்கியது அதிமுக அரசுதான்.
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு கட்டுப்படியாகும் அளவுக்கு விலை குறைக்கப்படும். ஏழை பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்திவிட்டார்கள். மாணவர்களுக்கு மடிக்கணினியை கூட நிறுத்திவிட்டு, கல்வியில் கூட அரசியல் செய்கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சி வந்தவுடன் பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் மடிக்கணினி வழங்கப்படும். வருகின்ற தேர்தல் உங்களுடைய தேர்தல்.
பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்ததில் என்ன தப்பு? பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்துவிட்டார்கள் என மடைமாற்றம் செய்து மக்களை குழப்பப் பார்க்கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சி என்பது மக்கள் ஆட்சி. மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் அரசாக இருக்கும். தேர்தல் வருகிறது என்பதால் உங்களுடன் ஸ்டாலின் என மக்களை ஏமாற்றுவதற்காக வருகிறார்கள். ஸ்டாலின் அரசு மக்களை ஏமாற்றும் அரசு. தி.மு.க. அரசின் மக்கள் விரோத அரசு வீட்டுக்கு அனுப்பப்படும். ஸ்டாலின் தி.மு.க. அரசு பெயிலியர் மாடல் அரசு. இவர் அவர் பேசினார்.
இந்த எழுச்சி ஆரவாரமே கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வெற்றி பெற்று விட்டதாக அறிவிக்கிறது. இந்த எழுச்சி பயணத்தில் இவ்வளவு பெரிய கூட்டத்தை கும்பகோணத்தில் பார்க்கிறேன். இன்றைய தினம் ஸ்டாலின் திமுக கூட்டணி பலமாய்ந்து கூட்டணி. 200 இடங்களில் கனவு கண்டு கொண்டிருக்கிறார். நிஜத்தில் வெற்றி பெறுவது அதிமுக தலைமையிலான கூட்டணிதான். 210 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும். அதிமுக ஆட்சி தான் மக்களுக்கு ஏராளமான திட்டங்களை செய்துள்ளது.
இன்று அனைத்து தரப்பு மக்களும் உயர்வடைய காரணம் அதிமுக ஆட்சிதான். நான் முதல்வராக இருக்கும்போது கடுமையான வறட்சி. அப்பொழுது விலைவாசி ஏறவில்லை. அதற்குப் பிறகு கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் அனைத்தையும் புரட்டி போட்டு சென்று விட்டது. அப்போதும் விலைவாசி உயராமல் பார்த்துக்கொண்டோம். இதற்குப் பிறகு கொரோனா . 11 மாத காலம் யாரும் வெளியில் வரவில்லை எந்த தொழில் நடக்கவில்லை. அரசுக்கு எவ்வித வருமானமும் இல்லை. அப்போதும் விலைவாசி உயரவில்லை.
ஆனால் இப்பொழுது திமுக ஆட்சிக்கு வந்து. ஐம்பது மாதங்கள் ஆகிறது. விலைவாசி விண்ணை தொடுகிறது. அரிசி பருப்பு எண்ணெய் விலை என அனைத்து விளையும் உயர்ந்து மக்கள் வாழ்க்கை நடத்த முடியாமல் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று ஸ்டாலின் பேசுகிறார் எடப்பாடி பழனிச்சாமிக்கு படிப்பு என்றால் கசக்குகிறது என்கிறார். படிப்பு இனித்ததால் தான் இத்தனை கல்லூரிகளை திறந்தோம். நீ எத்தனை கல்லூரிகளை திறந்தாய். எந்த கல்லூரியில் சிறந்த மாதிரி இல்லை வேண்டுமென்றே திட்டமிட்டு இன்றைக்கு திராவிட முன்னேற்ற கழகம் அன்றாட செய்திக்காக அதிமுக அரசு எதுவும் செய்யவில்லை என்ற மாயத் தோற்றத்தை, பொய்யான தோற்றத்தை பொய்யான செய்தியை வெளியிட்டு வருகின்றனர்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரே நேரத்தில் இதே மாதத்தில் 20 ஆயிரம் பேர் பணி ஓய்வு பெற்றுள்ளனர். கடந்த நான்கு ஆண்டு திமுக ஆட்சியில் 75 ஆயிரம் பேர் பணி ஓய்வு பெற்றுள்ளனர். அதில் 25 ஆயிரம் மீதி. அப்படி என்றால் 5.75 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளது.
நீங்கள் என்ன செய்தீர்கள் அனைத்தும் பொய். தேர்தல் நேரத்தில் அழகாக அறிக்கை விடுவார்கள். 525 அறிவிப்பு நிறைவேற்ற போகிறோம் என அள்ளி அள்ளி கொடுத்தார்கள்.
இன்று ஸ்டாலின் கூறுகிறார் எடப்பாடி பழனிச்சாமி பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்துவிட்டார். அதிமுகவை, பா.ஜ. விழுங்கி விடும் என்கிறார். எடப்பாடி பழனிச்சாமி என்ன புழுவா? மீன் தின்பதற்கு.
ஸ்டாலின் அவர்களே நீங்கள் தான் பல கட்சிகளை விழுங்கிக் கொண்டிருக்கிறீர்கள் அந்த கூட்டணி கட்சிகளை தான் லபக் என்று விழுங்குகிறீர்கள். காங்கிரஸ் தேய்ந்து விட்டது. கம்யூனிஸ்ட் கட்சி தெரியவில்லை. விடுதலை சிறுத்தை ஏதேதோ காரணங்களை கூறி அங்கு ஒட்டிக் கொண்டிருக்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.