Skip to content

பிரதமரை சந்திப்பது எப்போது? எடப்பாடி பேட்டி

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டை மாவட்டத்தில்  இன்று சுற்றுப்பயணம்  செய்து வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடி  நாளை இரவு திருச்சி வந்து தங்குகிறார்.  அதிமுக, பாஜக கூட்டணி ஏற்பட்ட பிறகு  எடப்பாடி பிரதமர் மோடியை சந்திக்கவில்லை.  நாளை அல்லது நாளை மறுநாள் திருச்சியில் எடப்பாடி,  பிரதமர் மோடியை சந்திப்பார் என  எதிர்ப்பார்க்கப்படுகிறது.

புதுக்கோட்டையில் இன்று பத்திரிகையாளர்களை எடப்பாடி சந்தித்தார். அப்போது பிரதரை சந்திப்பீர்களா, எப்போது சந்திக்கிறீர்கள் என கேட்டனர். அதற்கு எடப்பாடி அளித்த பதில்:

பிரதமரின் பயணத்திட்டம் இன்னும் எங்களுக்கு முழமையாக கிடைக்கவில்லை.  அவரது பயணத்திட்டம் எங்களுக்கு  கிடைத்த பிறகு தான் அவரை  சந்திப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

error: Content is protected !!