Skip to content

ஐபிஎல்: ஐதராபாத் அணி வெளியேற்றப்படுமா?

18வது  ஐபிஎல் போட்டி  கடந்த மாதம் 22 ம் தேதி தொடங்கியது. மொத்தம் 10 அணிகள்  இதில் பங்கேற்றுள்ளன.  லீக் ஆட்டங்கள்  இப்போது  இறுதிக்கட்டத்தை  நெறுங்கி உள்ளது. 18ம் தேதியுடன்  லீக் போட்டிகள்  முடிகிறது.  மொத்தம் 74 போட்டிகள் கொண்ட தொடரில் நேற்று இரவு வரை 54 போட்டிகள் முடிந்துள்ளன. 55வது போட்டி இன்று நடக்கிறது. இதில் ஐதராபாத்தும், டில்லியும் மோதுகிறது. இந்த போட்டி ஐதராபாத்தில் நடைபெறும்.

நேற்று வரை உள்ள நிலவரப்படி  பெங்களூரு அணி 16 புள்ளிகள் பெற்று  முதலிடத்தில் உள்ளது. கிட்டதட்ட அந்த அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.  அதே நேரத்தில்  சென்னை, ராஜஸ்தான் அணிகள்  பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய முடியாத நிலைக்கு சென்று வெளியேற்றப்பட்டு விட்டன.

இன்று நடைபெறும் போட்டியில் ஐதராபாத் தோற்றுவிட்டால்,  அந்த அணியும் 3வதாக வெளியேறும் அணி பட்டியலில் இடம் பிடித்து விடும். ஒருவேளை ஐதராபாத் வெற்றி பெற்றுவிட்டால், பிளே ஆப் க்குள் சென்று விடுமா என்றால் அதுவும் சந்தேகம் தான்.

சில நேரம் கடைசி லீக் தான்   பிளே ஆப் க்குள் நுழையும்  4வது அணியை தீர்மானிக்கும். அப்படி ஒரு இழுபறியான நிலையும் சில முறை ஐபிஎல்லில் ஏற்பட்டு இருக்கிறது.  இன்னும் 3 போட்டிகளில் ஆட வேண்டிய பஞ்சாப்  இன்னும் 1 போட்டியில் வென்றாலே பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

இதைத்தவிர்த்து  மற்ற 2 அணிகள் எது என்பது அடுத்து வரும் போட்டி முடிவுகள் மூலம் தெரியவரும். 20ம் தேதி முதல் பிளே ஆப்  போட்டிகள் தொடங்கும். 25ம் தேதி இறுதிப்போட்டி  நடைபெறும்.

error: Content is protected !!