Skip to content

முதிய தம்பதி கேஸ்சிலிண்டரை திறந்து தற்கொலை முயற்சி… மனைவி பலி..

மயிலாடுதுறை அருகே நீடூர் மெயின் ரோட்டில் வசித்தவரும் இளங்கோவன்(69) செந்தாமரை(60) முதிய தம்பதியினர் கேஸ்சிலிண்டரை திறந்து விட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளனர்.சிலிண்டரை திறந்து விட்டு தீ வைத்துக் கொண்ட சம்பவத்தில் மனைவி செந்தாமரை(60) பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் இளங்கோவன் 100% காயத்துடன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தங்களை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை என்பதால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக இளங்கோவன்(69) புலம்பிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மயிலாடுதுறை நீதிபதி கலைவாணி இளங்கோவனிடம் மரண வாக்குமூலம் வாங்கியுள்ளார். இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!