Skip to content

அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் மாம்பழ சின்னம் ஒதுக்கீடு.. கரூரில் கொண்டாட்டம்

அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்ததை வரவேற்று கரூரில் அன்புமணி ஆதரவு பாமகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக செயல்பட்டு வந்த நிலையில், அன்புமணியை பாமகவிலிருந்து நீக்கி வைப்பதாக ராமதாஸ் அண்மையில்

அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று தேர்தல் ஆணையம் மாம்பழம் சின்னம் அன்புமணி ராமதாஸுக்கு ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பை வரவே பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அன்புமணி ஆதரவு கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பிரேம்நாத் தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கோஷங்கள் எழுப்பி கொண்டாடினர்.

error: Content is protected !!