நிதி அறிக்கைகள் சமர்ப்பிக்கத் தவறியதால் 42 அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் பதிவு ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கை இந்தியத் தேர்தல் ஆணையம்தமிழகத்தில் செயல்பட்டு வந்த 42 சிறிய பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தேர்தல் சட்ட விதிகள் மற்றும் காலக்கெடுவைப் பின்பற்றத் தவறியதே இந்த அங்கீகாரம் ரத்துசெய்யப்பட்டதற்கான முதன்மைக் காரணமாகும். குறிப்பாக, குறிப்பிட்ட காலத்திற்குள் நிதி அறிக்கைகள் சமர்ப்பிக்காதது மற்றும் தொடர்ந்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாதது போன்ற முக்கியமான விதிகளை மீறிய காரணங்களுக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பதிவு ரத்துக்கான முக்கிய காரணங்கள் இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பின்னால், தேர்தல் ஆணையத்தின் கடுமையான கண்காணிப்பு மற்றும் விதிகள் மீறலே முக்கிய காரணமாகும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளின்படி, பதிவு செய்யப்பட்ட கட்சிகள் சில அடிப்படை விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும்.1. 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாதது: தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகள் எந்தவொரு சட்டமன்றத் தேர்தல் அல்லது மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத கட்சிகள், செயல்பாட்டில் இல்லாத கட்சிகளாகக் கருதப்பட்டு அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நிதி அறிக்கைகள் சமர்ப்பிக்கத் தவறியது: ஒரு அரசியல் கட்சி , வருமான வரிச் சட்டம் மற்றும் தேர்தல் விதிகள் கோரும்படி, அதன் ஆண்டு நிதி அறிக்கைகளை (Annual மற்றும் நன்கு அளித்த விவரங்களை குறித்த காலத்திற்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கத் தவறியது.
முகவரி மற்றும் தொடர்பு விவரங்களின் மாற்றம்: கட்சியின் தலைமையிடத்தின் முகவரி மற்றும் நிர்வாகிகளின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் முறையாகப் புதுப்பிக்காமல் விட்டதும் ஒரு காரணமாகும். அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட தமிழக கட்சிகள் நீக்கம் செய்யப்பட்ட 42 தமிழகக் கட்சிகள் பட்டியலில், சில முக்கியமான கூட்டணி கட்சிகளும் இடம்பெற்றுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

