Skip to content

சென்னை ஏர்போட்டில் மின் கசிவு..திடீர் தீ விபத்தால் பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில் மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
 
தீ விபத்தைத் தொடர்ந்து ஏர்லைன்ஸ் ஊழியர்கள், பயணிகள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். விமான நிலையத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணிகளில் 3 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சிறிது நேரம் விமான சேவைகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தீவிபத்தால் ஏற்பட்ட புகை சர்வதேச விமானங்கள் புறப்படும் பகுதியை சூழ்ந்ததால் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது 

error: Content is protected !!