Skip to content

கரூர் அருகே மின் கசிவு… வெல்டிங் பட்டறையில் தீவிபத்து

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் சோஃபான் என்பவர் மின்சார வாரியம் அலுவலகம் அருகே கீற்று கொட்டகை அமைத்து வெல்டிங் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று மாலை வேலை முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

திடீரென கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது அருகில் இருந்த பொதுமக்கள் அணைக்க முயன்ற போது தீ பற்றி எரிய ஆரம்பித்துள்ளது அருகில் இருந்தவர்கள் அரவக்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அருகில் கடைகள் எதுவும் இல்லாததால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது இதனால் அப்பகுதியில் இரவு நேரத்தில் பரபரப்பாக காணப்பட்டது.

error: Content is protected !!