Skip to content

யானைகள் முகாமில் யானை பொங்கல் விழா கோலாகலம்…

பொள்ளாச்சி டாப்சிலிப் அடுத்துள்ள கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் யானை பொங்கல் விழா கோலாகலம் கும்கி யானைகள் உட்பட 24 யானைகள் பங்கேற்பு – யானை பொங்கல் வழக்கமாக கொண்டாடப்பட்டு வந்த டாப்ஸ்லிப் பகுதியில் அடுத்த ஆண்டு கொண்டாட வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி வனசரகம் டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் வனத்துறையினரால் கும்கியனைகள் உட்பட 24 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

வனத்திற்கும், வனத்துறையினரின் பல்வேறு பனிகளுக்கு உதவியாக இருக்கும் இந்த யானைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆண்டு தோறும் யானைப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தாண்டு டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் கொண்டாடபட்ட யானை பொங்கல் விழாவில் யானைகளை குழிப்பாட்டி, யானைகளுக்கு பொட்டு வைத்தும் மாலைகள் அணிவித்து மரியாதை செய்யப்பட்டு முன்னதாக அங்குள்ள விநாயகரை யானைகள் துதிகையை தூக்கி மண்டியிட்டு வணங்கியது.

பின்பு பழங்குடியின மலைவாழ் மக்கள் பாரம்பரிய முறைப்பட்டி மண்பானையில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படைக்கப்பட்டபின்னர் யானைகளுக்கு பிடித்த உணவான கரும்பு ,வாழை, மற்றும் ஒவ்வொரு யானைக்கும், கொள்ளு, ராகி, அரிசி சாதம் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டது.

இந்த யானை பொங்கல் விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.

மேலும் சுற்றுலா பயணிகள் கூறுகையில் வழக்கமாக வீட்டு பொங்கல், மாட்டுப்பொங்கல், பூப்பொங்கல் கொண்டாடுவோம் ஆனால் இந்த வனப்பகுதியில் யானைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கொண்டாடபட்ட யானை பொங்கல் விழாவில் கலந்து கொள்வது புது அனுபவம் மற்றும் மகிழ்ச்சியாக உள்ளது எனவும் இங்கு ஒரே இடத்தில் 20.க்கும் மேற்பட்ட யானைகளை பார்பது மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்..

அதேபோல் முன்பு டாப்ஸ்லிப் மத்தியில் உள்ள புல்வெளி பகுதியில் யானை பொங்கல் வழக்கமாக கொண்டாடப்பட்டு வந்தது இதனால் டாப்ஸ்லிப் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் இந்த யானை பொங்கலை கண்டு ரசித்து வந்தனர்.

ஆனால் தற்போது கொரோனாவிற்கு பிறகு கடந்த 5 ஆண்டுகளாக டாப்ஸ்லிப் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள கோழிக்கமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் இந்த யானை பொங்கலை கொண்டாடி வருவதால் ஒரு சில சுற்றுலா பயணிகள் மட்டுமே அங்கு சென்று பார்க்க முடிந்ததாகவும் இந்த யானை பொங்கலை காண டாப்ஸ்லிப் வந்த மற்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் கடந்த 5 ஆண்டுகளாக திரும்பி செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் எனவே வழக்கமாக கொண்டாடப்படும் டாப்ஸ்லிப் பகுதியில் யானை பொங்கல் அடுத்த ஆண்டு கொண்டாட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!