108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு 16 சதவீதத்திற்கு குறைவாக ஊதிய உயர்வு வழங்கக்கூடாது என்று தமிழக அரசு தொழிற்சங்கம் EMRI-GHS நிர்வாகம் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை கைவிட்டு தன்னிச்சையாக 10% ஊதிய உயர்வை குறைத்து வழங்கி மறைமுக சம்பள வெட்டை அமல்படுத்தும் தனியார் நிர்வாகத்தை கண்டித்தும்,108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் ஊதிய உயர்வை 16 சதவீதத்திற்கும் மேல் உயர்த்தி வழங்க வலியுறுத்தியும் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு சங்கத்தின் மாநில செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் சாமுவேல் மாவட்ட தலைவர் சுந்தரவடிவேல் மாநில செயலாளர் சிவக்குமார் மாவட்ட துணை செயலாளர் சுதன் உள்ளிட்ட தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.