தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக உள்ளவர் ஐ.பெரியசாமி. திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். இவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலையிலேயே அமைச்சர் பெரியசாமியின் இல்லத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஐ.பெரியசாமிக்கு சொந்தமான சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் உள்ள நிறுவனங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகிறார்கள்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது தெரியவருகிறது. கடந்த திமுக ஆட்சியின் போது வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த போது அப்போதைய முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த அதிகாரிகளுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்ததாக ஐ.பெரியசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது தெரியவருகிறது. கடந்த திமுக ஆட்சியின் போது வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த போது அப்போதைய முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த அதிகாரிகளுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்ததாக ஐ.பெரியசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.அந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட போதிலும் அண்மையில் அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கிரீன்வேஸ் சாலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அது போல் திமுக எம்பியும் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்தின் வீட்டிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது வேலூரில் திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான இடத்தில் இருந்து ரூ 11 கோடி பணத்தை வருமானவரித் துறை பறிமுதல் செய்தது. அது போல் கடந்த ஏப்ரல் மாதம், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, அவரது மகன் அருண் நேரு உள்ளிட்டோர் வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு நடத்தப்பட்டது. கடந்த 2013 ஆம் ஆண்டு வங்கிகளில் பெறப்பட்ட கடன் தொகை தொடர்பாக சிபிஐ, கடந்த 2021 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. மேலும் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. கிட்டதட்ட 12 ஆண்டுகள் கழித்து அமலாக்கத் துறை இந்த சோதனையை நடத்தியது. அது போல் திமுக மூத்த தலைவரும் பொதுப் பணித் துறை , நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் திருவண்ணாமலை வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறை சோதனை கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடத்தியது. அவருக்கு சொந்தமான கலை கல்லூரிகள், பொறியியல், மருத்துவக் கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், ஹோட்டல்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகாரின் பேரில் சோதனை நடத்தப்பட்டது.