Skip to content

பொறியியல் கல்லூரி 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும்  மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் என   சுமார் 400க்கும் மேற்பட்ட  பொறியியல் கல்லூரிகள் உள்ளன.  இதில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடைபெறும்.  இந்த கலந்தாய்வுக்கான விண்ணப்பம்  செய்யும் முறை  நாளை மறுநாள்(7ம் தேதி) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் இதனை தொடங்கி வைக்கிறார்.    ஜூன் மாதம் 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.  அதன்பிறகு  மாணவர்கள் பெற்ற மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் அவர்களுக்கு  இடங்கள் ஒதுக்கப்படும். தமிழ்நாட்டில் சுமார் 2 லட்சம் பொறியியல் இடங்கள் உள்ளன.

தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் இதனை அறிவித்துள்ளது.

error: Content is protected !!