தமிழ்நாட்டில் அரசு ,அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் 500க்கும் மேல் உள்ளன. இந்த கல்லூரிகளில் சேர்வதற்கான இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கியது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு பி.இ மற்றும் பி.டெக் இடங்களுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்தாண்டு பொறியியல் கலந்தாய்வுக்காக சுமார் மூன்று லட்சத்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பம் பதிவு செய்ததில் 2, 41,641 மாணவர்கள் இறுதியாக தகுதி பெற்றனர்.
அதன்படி இவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 7ம் தேதி நடத்தப்பட்டது. முதல் இரண்டு நாட்கள் அரசு பள்ளிகளில் படித்த சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் , அதன் தொடர்ச்சியாக பொதுப்பிரிவில் உள்ள சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது.