தமிழக அரசியலில் ஆளும் தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க. இடையே அவ்வப்போது அறிக்கைப் போர் வெடிப்பது வழக்கம். தற்போது, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டில்லி விவகாரங்கள் குறித்து வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ளார்.
சமீபத்தில், மத்திய அரசின் சில திட்டங்கள் மற்றும் டெல்லி பயணம் குறித்துப் பேசிய இபிஎஸ், தமிழக அரசு மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பதால் மாநில உரிமைகள் பாதிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார். குறிப்பாக, 100 நாள் வேலைத் திட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்களை அவர் வரவேற்றது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
முதல்வர் ஸ்டாலினின் பதிலடி…
இந்த அறிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ்ஸை “டெல்லியின் அடிமை” என்று விமர்சித்துள்ளார்.
” “டெல்லியில் உள்ள தனது எஜமானர்களைத் (பாஜக தலைவர்கள்) திருப்திப்படுத்தவே இபிஎஸ் இத்தகைய அறிக்கைகளை விடுகிறார். டெல்லி எஜமானர்கள் எதைச் சொன்னாலும் ‘எஸ் சார்’ என்று சொல்லும் கட்டாயத்தில் அவர் இருக்கிறார்” என்று ஸ்டாலின் சாடினார்.
“திமுக ஆட்சியைப் பற்றிக் குறை கூற எதுவும் கிடைக்காததால், டெல்லி பயணம் குறித்து அவர் தினமும் அறிக்கைகளை வெளியிட்டு அரைத்த மாவையே அரைக்கிறார். அவருக்குப் பதிலளித்து எனது தகுதியைக் குறைத்துக் கொள்ள விரும்பவில்லை” என்று காட்டமாகத் தெரிவித்தார்.
மாநில உரிமை vs டெல்லி அணி: “தமிழகம் என்றைக்குமே டெல்லிக்கு தான். எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் பக்கம் நிற்காமல், டெல்லி அணியின் பக்கம் நிற்கிறார்” என்று அவர் தனது எக்ஸ் (X) தளத்திலும் பதிவிட்டுள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில், யார் உண்மையான மக்கள் நலன் காக்கும் தலைவர் என்பதைக் காட்டுவதில் இரு தலைவர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

